Skip to main content

பாகிஸ்தானை ஆதரிப்பவர்களை சுட்டுத்தள்ளுங்கள் - பாஜக அமைச்சர் பேச்சு!

Published on 24/02/2020 | Edited on 25/02/2020

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் பேரணி நடைபெற்றது. இதில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் ஓவைசி கலந்து கொண்டார். அவர் மேடையில் அமர்ந்திருக்கும்போது, பொதுமக்கள் மத்தியில் பேசிய அமுல்யா என்ற பெண் "பாகிஸ்தான் வாழ்க" என கோஷமிட்டார். அவரை தடுத்து நிறுத்த ஓவைசி உள்ளிட்டோர் முயன்றனர். எனினும் அமுல்யா மைக்கை கொடுக்காமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினார். இதுமிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 



அந்த பெண் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையயடுத்து அமுல்யா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அமுல்யாவை கொலை செய்தால் 10 லட்சம் தருவதாக ஸ்ரீராம்சேனா அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானை ஆதரித்து மேடைகளில் பேசினால் அவர்களை அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கர்நாடக விவசாய துறை அமைச்சர் பி.சி பாட்டேல் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்