Skip to main content

”சுதந்திரமாக எழுத அனுமதி வேண்டும்....”-உச்சநீதிமன்றம்

Published on 05/09/2018 | Edited on 05/09/2018
kerala author


2016ஆம் ஆண்டு 'ஆதாம்' என்னும் சிறுகதை தொகுப்பிற்காக கேரள சாஹித்ய அகாதமி விருதை பெற்ற ஹரிஷ் எழுதிய நாவலான மீஷாவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற மனுவை உச்சநீதி மன்றம் இன்று தள்ளூபடி செய்தது.
 

மீஷா, மலையாள மாத்ருபூமி என்னும் பத்திரிகையில் மூன்று வாரம் வெளியானது. பல இந்து அமைப்புகளிலிருந்து வந்த எதிர்ப்புகளின் காரணமாக அந்த பத்திரிகையில் வரும் தொடரை நிறுத்தினார் ஹரிஷ். அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 1ஆம் தேதி, டிசி பதிப்பகம் இதை பதிப்பித்து வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து, இந்த நாவல் எந்த வகையிலும் வெளியிடக்கூடாது. இது இந்து பெண்களை தவறாக சித்தரிக்கிறது என்று உச்சநீதிமன்றத்தை மனுதாரர் நாடினார்.
 

ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்த மனுவை பரீசிலனை செய்த உச்சநீதி மன்றம், ஐந்து நாட்களுக்குள் தொடராக வெளியான இக்கதையின் நகலை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்றது. இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது “தங்களது கற்பனையில் தோன்றுவதை எழுத்தாளர்கள் சுதந்திரமாக எழுத அனுமதிக்க வேண்டும்; எழுத்தாளர்களின் கற்பனை இவ்வாறுதான் இருக்க வேண்டும் என யாராலும் கட்டமைத்து கூற முடியாது” என்று உச்சநீதி மன்றம் தெரிவித்தது. பின்னர், இந்த நாவலை தடை கோரும் மனுவையும் தள்ளுபடி செய்தது. 

 

சார்ந்த செய்திகள்