Published on 28/11/2024 | Edited on 28/11/2024
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிற்கல்வி ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் பகுதியில் அரசுப் பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராக ராஜேந்திரன் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சில மாணவிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகளின் பெற்றோர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ராஜேந்திரன் மீதான பாலியல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது இதனையடுத்து தொழிற்கல்வி ஆசிரியர் ராஜேந்தனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.