டெல்லியின் ஷாஹின்பாக் பகுதியில் சிஏஏ-வுக்கு எதிராக சுமார் 100 நாட்களுக்கும் மேலாக இஸ்லாமியர்கள் நடத்தி வந்த போராட்டம் கரோனா தடுப்பு நடவடிக்கைகளால் முடிவுக்கு வந்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கடந்த 100 நாட்களாக டெல்லியின் ஷாஹின்பாக் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஷாஹின்பாக் போராட்டம் கலைக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று அபாயம் காரணமாக இன்று காலை 7 மணியளவில் டெல்லி போலீஸ் ஷாஹின்பாக் பகுதியிலிருந்த போராட்டக்காரர்களை வெளியேற்றினர். டெல்லியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை வரை சுமார் 50க்கும் மேற்பட்டோர் போராட்டக்களத்தில் இருந்த சூழலில், ஆறு பேரைக் கைது செய்துள்ள போலீசார் மீதமிருந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.