Published on 11/12/2018 | Edited on 11/12/2018

நேற்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒடிசாவை சேர்ந்த சக்திகாந்த தாஸ் என்பவர்தான் தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 3 ஆண்டுகளுக்கு அவர் பதவி வகிப்பார் என்பதும், இவர் தமிழ்நாட்டின் தொழில்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.