Skip to main content

"பாங்க் ஆப் பரோடா" வங்கியுடன் தேனா , விஜயா வங்கிகள் இணைப்பு நடைமுறைக்கு வந்தது !

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளிடம் தொழில் அதிபர்கள் கடன்களை பெற்றுக்கொண்டு திருப்பிச்செலுத்தாததால் விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதற்கு உதாரணமாக Kingfisher Airlines MD. விஜய்மல்லையா ரூபாய் 9,000 கோடி கடனை பெற்று லண்டன் தப்பிச்சென்றுள்ளார். இவரை போல் நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஷி உள்ளிட்டோர்கள் கடன் பெற்றுக்கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன் பலனாக நிரவ் மோடி அண்மையில் லண்டனில் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

bank



இதனைத் தொடர்ந்து வங்கிகளை சீரமைக்கும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மத்திய அமைச்சரவை மற்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் வங்கிகள் இணைப்புக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்கள். இதனிடையே "பாங்க் ஆப் பரோடா வங்கி" (BOB) இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இந்த வங்கியின் கிளைகள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் மும்பையை சேர்ந்த "தேனா வங்கி" (DENA BANK) மற்றும் பெங்களூரை சேர்ந்த விஜயா வங்கி (VIJAYA BANK) தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த வங்கிகளுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை அளித்த போதிலும் கடன் சுமையில் இருந்து தேனா மற்றும் விஜயா வங்கிகள் மீண்டு வரவில்லை. 
 

notifications



மேலும் இந்தியாவில் உள்ள வங்கிகளிலேயே இந்த இரு வங்கிகளில் உள்ள வாராக்கடன்கள் (Non- Performing Asset) மிக அதிகம். இதனால் தான் வங்கிகள் இணைப்பு முறையை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.இத்தகைய வங்கிகளின் இணைப்பு (ஏப்ரல் -1)  இன்று முதல் நடைமுறைக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதே போல் தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பணப்பரிவர்த்தனையை இன்று முதல் அருகில் உள்ள "பாங்க் ஆப் பரோடா" (BOB) வங்கி கிளைகளில் மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டு வரும் வங்கிகளில் "ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா" (SBI) வங்கி  முதலிடத்திலும் , ஐசிஐசிஐ (ICICI) வங்கி இரண்டாம் இடத்திலும் உள்ளது. 

இந்த வரிசையில் "பாங்க் ஆப் பரோடா"  வங்கி (BOB) மூன்றாமிடம் பிடிக்கும் எனவும் , இந்தியாவில் மூன்றாவது மிகப்பெரிய (Largest Bank)  வங்கியாக இந்த வங்கி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் "பாங்க் ஆப் பரோடா" வங்கியின் கீழ் தேனா மற்றும் விஜயா வங்கிகள் இணைவதால் கடன் சுமை குறையும் எனவும் , பாங்க் ஆப் பரோடா வங்கி ஈட்டும் லாபம் தேனா மற்றும் விஜயா வங்கிக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வங்கிகள் இணைப்பு மூலம் (Public Sector Banks) "PSBs" இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 21 லிருந்து 19 ஆக குறைந்துள்ளது.

பி. சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்