Published on 13/02/2019 | Edited on 13/02/2019

ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பே அனில் அம்பானி தெரியும் என ராகுல் காந்தி குற்றச்சாட்டியிருந்த நிலையில் அதனை ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது மறுத்துள்ளது. இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ள பதிலில், 'ராகுல் காந்தி கூறிய மின் அஞ்சல் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்திற்கும், ஏர்பஸ் நிறுவனத்திற்கும் போடப்பட்ட ஒரு ஒப்பந்தம் ஆகும். மேக் இன் இந்தியா திட்டத்திற்காக கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் சிவில் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் தயாரிப்பு தொடர்பானது. ரபேலுக்கும் அந்த ஒப்பந்தத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.