Published on 01/05/2019 | Edited on 01/05/2019
சிவசேனா கட்சி, இசுலாமிய பெண்கள் பொது இடங்களில் புர்கா அணிய இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என்று கூறியது.
இது இந்தியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பல அரசியல் தலைவர்கள் இந்த கருத்திற்கு தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேசுகையில், “புர்கா அணியும் அனைத்து பெண்களும் பயங்கரவாதி இல்லை. அப்படி பயங்கரவாதிகளாக இருந்தால் அவர்களின் புர்காவை எடுத்துவிடலாம். இது அவர்களின் பாரம்பரியம், அவர்களுக்கு புர்கா அணிய உரிமை உள்ளது. இந்தியாவில் புர்கா அணிவதற்கு எந்த தடையும் இருக்காது” என்றார்.