Skip to main content

"போர்க்கோலத்தில் விவசாயிகள்" -கேரள எதிர்க்கட்சித் தலைவர் ஆவேசம்...

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

ramesh chennithala about farmers bill

 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களால், விவசாயிகள் தற்போது போர்க்கோலம் பூண்டுள்ளனர் என கேரள எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார். 

 

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. விவசாயத்தை மொத்தமாகத் தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் தாரைவார்க்கும் சட்டதிருத்தமாக இது இருக்கும் என எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அரசு சந்தை முறையை அழிவை நோக்கி இட்டுச்செல்வது, விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையைக் கிடைக்கவிடாமல் செய்வது, விவசாய நிலங்கள் மீதும், விவசாயிகள் மீதும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை வலுப்படுத்துவது ஆகியவையே இந்த மசோதாக்கள் விவசாயிகள் மீது ஏற்படுத்தும் தாக்கமாக இருக்கும் எனக்கூறி எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்து வருகின்றன.

 

இந்நிலையில் இந்த மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, "மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாய சட்டங்கள் கார்பரேட் நிறுவனங்களுக்கே உதவும். இதனால் விவசாயிகள் தற்போது போர்க்கோலம் பூண்டுள்ளனர். விவசாயிகளை மோடி அரசு முழுமையாக புறக்கணித்து விட்டது. விவசாயிகளின் நிலைமை தற்போது பரிதாபத்துக்குரியதாக மாறிவிட்டது" எனக் கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்