மக்களவை தேர்தலில் நெருங்கி வரும் நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
அந்த வகையில் அசாம் மாநிலத்தின் திப்ரூகர் பகுதியில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சாரத்தின் போது அவர் பேசுகையில், "காங்கிரஸ் கட்சியினருக்கு காவலாளிகளை தான் பிடிக்கவில்லை என்று நினைத்தேன், ஆனால் அவர்களுக்கு தேநீர் தொழிலாளர்களையும் பிடிக்கவில்லை. அவர்களுக்கு பிடிக்காத ஒரே தேநீர் தொழிலாளி நான் தான் என நினைத்தேன். ஆனால் நான் நாட்டின் அனைத்து மூலைகளிலும் பயணம் செய்தபோதுதான் அவர்களுக்கு மொத்தமாகவே எந்த தேநீர் தொழிலாளிகளையும் பிடிக்காது என கண்டறிந்தேன். தேயிலை விவசாயிகள் கடந்த 70 ஆண்டுகளாக பிரச்சனைகளை எதிர்கொள்ள காரணம் என்ன? அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட கிடைக்கவில்லை. ஒரு தேநீர் தொழிலாளியின் வலிகள் ஒரு டீக்கடைக்காரருக்கு மட்டுமே தெரியும்" என கூறினார்.