Skip to main content

அவதூறு வழக்கு; மேல்முறையீடு செய்கிறார் ராகுல் காந்தி!

Published on 02/04/2023 | Edited on 02/04/2023

 

Rahul Gandhi gonna appeal in Surat court on his defamation case

 

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

தகுதி நீக்கம் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “பிரதமர் மோடி - அதானி இடையேயான தொடர்புகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவேன். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்பட மாட்டேன். என்னை தகுதி நீக்கம் செய்தாலும், கைது செய்தாலும் உண்மை பேசுவதைத் தொடர்ந்து செய்வேன்” என்று தெரிவித்திருந்தார்.

 

செங்கோட்டையில் திரண்ட காங்கிரஸினர்; பரபரப்பான டெல்லி!

 

நாடாளுமன்ற செயலகம், ராகுல் தனது அரசு பங்களாவை காலி செய்யச் சொல்லி அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதற்கு ராகுல் காந்தி, விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கிறேன் என்று சொல்லி அரசு பங்களாவை காலி செய்வதாக நாடாளுமன்ற செயலருக்கு பதில் கடிதம் எழுதியிருக்கிறார். 

 

இந்நிலையில், அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாளை ராகுல் காந்தி குஜராத் மாநிலம், சூரத் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்ய இருப்பதாக காங்கிரஸ் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்