தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்தல் முடிவுகளின்படி மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மிகப்பெரும் வெற்றியை ஈட்டி ஆட்சியை தக்கவைத்துள்ளது. மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் 213 இடங்களை வென்று மாபெரும் வெற்றியை மீண்டும் பதிவு செய்துள்ளது.
இதனையடுத்து மம்தா பானர்ஜி எப்போது பதவியேற்பார் என எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், நாளை மறுநாள் (மே 5) அவர் முதல்வராகப் பதவியேற்கிறார் என திரிணாமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. மம்தா இன்று இரவே ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மம்தா பதவியேற்கும்போது தொடர்ந்து மூன்றுமுறை ஆட்சியமைத்த ஒரே பெண் முதல்வர் என்ற பெருமையைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.