மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தெடர்ந்து பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சாரங்களில் தொடர்ந்து பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து பிரதமர் மோடியை பாஜக ஆட்சியை பற்றி விவாதிக்க ராகுல் அழைத்து வருகிறார். இந்நிலையில் இன்று இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "அன்பான பிரதமரே, என்னுடன் ஊழல்குறித்து விவாதிப்பதில் உங்களுக்கு என்ன பயம்? அப்படியென்றால் நான் நேரடியாக கூறுகிறேன். ரபேல் விவகாரம் மற்றும் அணில் அம்பானி விவகாரம், நீரவ் மோடி விவகாரம், அமித் ஷா சொத்து மற்றும் பணமதிப்பிழப்பு விவகாரம்". இதில் நாம் விவாதிக்கலாம் என ராகுல், மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.