Skip to main content

குடியரசுத் தலைவர் தேர்தலில் தே.ஜ.கூ. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு! 

Published on 21/06/2022 | Edited on 21/06/2022

 

nda loses presidential election Announcement of the candidate contesting on behalf of!

 

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளராக திரௌபதி முர்மு போட்டியிடுகிறார் என்று பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

 

முன்னதாக, டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தலைமை அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க.வின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 

nda loses presidential election Announcement of the candidate contesting on behalf of!

யார் இந்த திரௌபதி?- விரிவான தகவல்! 

 

ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர் திரௌபதி முர்மு. இவர், ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த சந்தால் பழங்குடியின தலைவராக உள்ளார். இந்த மாநிலத்தில் பிஜு ஜனதா தளத்துடன் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போது, துணை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். மேலும், ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஆவர். 

 

முதல்முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திரௌபதி முர்மு வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்