Skip to main content

பிரசாந்த் கிஷோரை கட்சியில் இணைய சொன்ன ராகுல் காந்தி?

Published on 15/07/2021 | Edited on 15/07/2021

 

rahul - prashant kishor

 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், பிரசாந்த் கிஷோரும் கடந்த 13ஆம் தேதி சந்தித்தனர். அண்மையில் பிரசாந்த் கிஷோரை இரண்டு முறை சந்தித்த சரத் பவார், எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒன்றை நடத்தினார். இது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி என கருதப்பட்டது. இருப்பினும் அதனை மறுத்த சரத் பவார், காங்கிரஸ் இன்றி மாற்று சக்தி உருவாகாது என தெரிவித்தார்.

 

இந்தச் சூழலில் ராகுல் காந்தியை பிரசாந்த் கிஷோர் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ராகுல் காந்தி - பிரசாந்த் கிஷோர் சந்திப்பின்போது பிரியங்கா காந்தி உடனிருந்ததாகவும், இந்தச் சந்திப்பில் சோனியா காந்தி காணொளி வாயிலாக கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தச் சந்திப்பில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் சேர்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும், கட்சியில் இணையும் பிரசாந்த் கிஷோருக்கு, மாநிலங்களில் காங்கிரஸிற்குப் புத்துணர்வு அளிக்கும் பணியும், தேசிய அளவில் காங்கிரஸை மாற்று சக்தியாக முன்னிறுத்துவதற்கான பணியும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதேபோல் தேர்தலில் காங்கிரஸை நீங்கள் வெற்றிபெற செய்ய வேண்டுமென விரும்பினால், கட்சியில் இணைந்து அதைச் செய்யுங்கள் என இந்தச் சந்திப்பின்போது ராகுல் காந்தி பிரசாந்த் கிஷோரிடம் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்