Skip to main content

மூதாட்டியை கன்னத்தில் அறைந்த காவலர்; வீடியோ பரவியதால் நடவடிக்கை

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

The policeman slapped the old lady on the cheek; Action as the video went viral

 

மத்திய அரசு பாரத்மாலா எனும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 83 ஆயிரத்து 677 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய நெடுஞ்சாலைகளும் உள் சாலைகளும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் வரை செலவாகும் எனக் கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிலையில் டெல்லி கதிரா தேசிய நெடுஞ்சாலையில் குர்தாஷ்பூரில் விவசாய நிலங்களை பாரத் மாலா திட்டத்திற்காகக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு எழுந்தது. அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காத பட்சத்தில் நிலங்களை அரசோ அல்லது தனியார் நிறுவனங்களோ கையகப்படுத்த அனுமதிக்கமாட்டோம் எனக் கூறி போராட்டம் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைக் கைது செய்ய காவல்துறையினர் முற்பட்டனர். அப்போது காவல்துறையினர் விவசாயி ஒருவரின் தலைப்பாகையை அவிழ்த்தனர்.

 

இதனைக் கண்டு ஆத்திரமடைந்த பெண்மணி காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது காவல் அதிகாரி அவரது கன்னத்தில் அறைந்தார். அப்போது உடன் இருந்த காவல் அதிகாரிகளும் அதனைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து தடுமாறிய பெண் மீண்டும் கை ஓங்கினார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பெண்ணை அடித்த காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கண்டங்கள் வலுத்து வரும் நிலையில் காவல் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்