சுருக்கு மடி வலையினை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக, புதுச்சேரி அருகேயுள்ள வீராம்பட்டினம், நல்லவாடு மீனவர்களிடையே நடு கடலிலும், கரையிலும் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு கிராமத்தையும் சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.
அதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் கடற்கரை பகுதியில் திரண்டதால், அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் போலீசார் இருதரப்பினரையும் கலையுமாறு அறிவுரை கூறியும், அவர்கள் கலையாததால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர்.
ஆனாலும் நல்லவாடு, வீராம்பட்டினத்தில் உள்ளிட்ட கிராமங்களில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், அந்த கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் பாதுகாப்பு பணிக்காக 100- க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அதில் இரு கிராம மக்களையும் அழைத்து பேசி சமாதானப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.