!['Is this public..''- beat the old man who gave the advice](http://image.nakkheeran.in/cdn/farfuture/ifKc04quhfxKVjy8OhiQGS6isctyJyJwjDxyPQpJA64/1716801018/sites/default/files/inline-images/a71904.jpg)
தெலுங்கானாவில் சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு மது அருந்திக் கொண்டிருந்த ஆண், பெண் என இருவரையும் அங்கிருந்த பொதுமக்கள் வாகன ஓட்டிகளை எச்சரித்த நிலையில் பீர் பாட்டில் உடன் மது அருந்திய பெண் அறிவுரை சொன்னவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் எல்.பி நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரத்திலேயே கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. காரில் ஸ்டைலாக சாய்ந்து கொண்டு இளம் பெண் ஒருவர் ஒரு கையில் பீர் பாட்டிலும் மற்றொரு கையில் சிகரெட்டும் பிடித்த படி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாகன ஓட்டிகளில் பெரியவர் ஒருவர் பொது இடத்தில் இப்படி மது குடிக்கலாமா? என அறிவுரை கூறினார். ஆனால் அறிவுரையால் ஆத்திரமடைந்த அந்த பெண் பெரியவரை திட்டியுள்ளார்.மேலும் அடிக்கவும் பாய்ந்தார்.
இதனால் அங்கு கூட்டம் கூடியது. சிலர் இந்த வாக்குவாதத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது வீடியோ எடுத்தவர்களுடன் அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சாலை ஓரத்தில் இப்படி காரை நிறுத்தி மது அருந்துவது சட்டப்படி குற்றம் உங்கள் இருவரையும் போலீசாரிடம் பிடித்துக் கொடுத்து விடுவோம் என அவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் காரில் ஏறி அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வெளியான வீடியோ அடிப்படையில் அந்த காதல் ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.