அரசுத்துறைகளில் அடுத்த ஒன்றரையாண்டுகளில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மனிதவள நிலவரங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார். இதன் பின், அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவும், இதன் மூலம் அடுத்த ஒன்றரையாண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். இந்த தகவலைப் பிரதமர் அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அரசுத்துறைகளில் மிக அதிகளவில் காலியிடங்கள் இருப்பதாகப் புகார்கள் இருந்து வந்தன. மேலும், நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கப் பிரதமர் நரேந்திர மோடி, இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.