குஜராத் மாநிலத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், எரிசக்தி திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
அதன் தொடர்ச்சியாக குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் பால் பதப்படுத்தும் ஆலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.121 கோடி மதிப்பில் அமைக்கப்படும் இந்த ஆலையில் நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் உலகிற்கே இந்தியா பாதையைக் காட்டி வழிநடத்துகிறது. வேளாண் சீர்திருத்தங்களை தங்கள் ஆட்சியின் போது எதிர்க்கட்சிகள் ஆதரித்தன. வேளாண் சீர்திருத்தங்களை ஆதரித்த எதிர்க்கட்சிகள் தற்போது விவசாயிகளைத் தவறாக வழி நடத்துகின்றனர். தங்கள் ஆட்சியில் வேளாண் சீர்திருத்தங்களைக் கொண்டு வராத எதிர்க்கட்சிகள் தற்போது எதிர்க்கின்றன. விவசாயச் சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் பல காலமாக வலியுறுத்தி வந்த அம்சங்கள்தான் வேளாண் சட்டங்களில் இடம் பெற்றுள்ளன. விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதில் அரசு உறுதிக் கொண்டுள்ளது. வேளாண் சட்டங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குத் தீர்வு காண அரசு தயாராக இருக்கிறது." என்றார்.