Skip to main content

பணமதிப்பிழப்பு பிரதமரின் புரட்சிகர நடவடிக்கை!- வெங்கையா நாயுடு

Published on 24/05/2018 | Edited on 24/05/2018

ஜி.எஸ்.டி. மற்றும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கைகள் பிரதமரின் புரட்சிகர நடவடிக்கைகள் என இந்திய துணைக் குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.
 

Venkaiah

 

 

 

திரிபுரா மாநிலத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணைக் குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கினார். பின்னர் அனைவரின் மத்தியிலும் பேசிய அவர், ‘ஜி.எஸ்.டி. மற்றும் பணமதிப்பு இழப்பு ஆகியவை பிரதமர் மோடி மேற்கொண்ட புரட்சிகர நடவடிக்கைகள் ஆகும். கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஜி.எஸ்.டி. மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் மட்டும் ரூ.1.4 லட்சம் கோடி. இதன்மூலம், புதிய வரிவிதிப்பு முறைமீது அதீத நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மூலம் நாட்டில் ஊழல் வெகுவாக குறைந்துள்ளது’ என பேசினார். 
 

மேலும், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம், வணிக வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் அவர் பேசியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்