Skip to main content

நடு இரவில் கோவா மாநிலத்தில் புதிய முதல்வர் பொறுப்பேற்பு...

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

நீண்ட நாட்களாக கணைய புற்று நோயால் அவதிப்பட்டு வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், ஞாயிறு இரவு உயிரிழந்தார்.

 

goa cm

 

மனோகர் பாரிக்கர் மறைவை தொடர்ந்து, அங்கு புதிய முதல்வராக யார் பதவியேற்பது என்ற குழப்பம் நீடித்து வந்தது. பாஜகவின் கூட்டணி கட்சியான மகராஷ்டிரவதி கோம்ண்டக் கட்சி (MGP) சட்டமன்ற உறுப்பினரான சுதின் தவாலிகர், முதலமைச்சராக முயற்சிகள் செய்தார். தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இந்நிலையில் கோவா பாஜக வை சேர்ந்த வினய் டெண்டுல்கர் அம்மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று இரவு 2 மணிக்கு கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவின் பிரமோத் சாவந்த் பதவியேற்றார்.மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சியின் தலைவர் சுதின் என்ற ராமகிருஷ்ண தாவில்கர், கோவா பார்வேர்ட் கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் ஆகிய இருவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

மனோகர் பாரிக்கர் முதல்வராக இருந்தபோது துணை முதல்வர்கள் இல்லாத நிலையில் தற்போது முதல்வர் பதவிக்காக கடும் போட்டி நிலவியதை அடுத்து துணை முதல்வர் பதவி இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்