incident of young man due to heart issue

அண்மைக் காலமாக, சிறு வயதில் இருக்கும் இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், இளைஞர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Advertisment

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள தானே பகுதியில் கிரிக்கெட் மைதானம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, இளைஞர் ஒருவர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, தான் எதிர்கொண்ட பந்தை தூக்கி அடித்து நின்று கொண்டிருந்தார்.

Advertisment

இதையடுத்து, அவர் திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி கொடுக்க முயன்றனர். அதில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.