Published on 05/12/2019 | Edited on 05/12/2019
கர்நாடகத்தின் 15 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதானி, காக்வாட். ஹிரேகெரூர், ராணிப்பென்னூர், விஜயநகரம் உள்ளிட்ட 15 தொகுதிகளுக்கு இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது. சுமார் 38 லட்சம் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 4,185 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 126 வேட்பாளர்கள் 15 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.