
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 36 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1,500- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 46,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
Isn’t comfortable bed and an eight hour sleep such a luxury ?
Yes it is... if you are a cop !
Proud of these #CoronaWarriors pic.twitter.com/3H9ZrZupNp
— Madhur Verma (@IPSMadhurVerma) April 24, 2020
இந்தியாவில் தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் காவலர்கள் கரோனோ பாதுகாப்புப் பணிகளின் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அவர்கள் பெரும்பாலும் தூக்கமின்றி வாகனங்களில் வருவோரை ஒவ்வொரு மாநில, மாவட்ட எல்லைகளில் நின்று சோதனை செய்திறார்கள். மேலும் கரோனா தொடர்புகளைக் கண்டறிவதிலும் அவர்களின் பங்கு அதிகம் இருக்கிறது. இந்நிலையில் போலிசார் இருவர் சாலையில் படுத்து உறங்குவதைப் போன்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த இரண்டு காவலர்களும் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் உறங்கும் புகைப்படத்தைத் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த டிஐஜி மதுர் வர்மா பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.