சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.
#WATCH Hyderabad: Rachakonda Police promoting the washing of hands, as part of awareness drive against #Coronavirus. (Video Source: Rachakonda Police) #Telangana pic.twitter.com/90BpdDjgNP
— ANI (@ANI) March 19, 2020
இருந்த போதிலும் இதுவரை இந்தியாவிலும் 146 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை இந்திய அரசாங்கம் தற்போது உறுதி செய்துள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து காவலர்கள் வாகன ஓட்டிகளை நிறுத்தி கைகழுவுதல் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்கள். அதில் கரோனா தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாக கைகளை எப்படிச் சுத்தம் செய்ய வேண்டும் என்பதை செய்முறை விளக்கம் செய்து காட்டினார்கள். இதற்கு வாகன ஓட்டிகள் நன்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.