Skip to main content

புதிய அமைச்சரவையில் மீன் வளத்துறை இடம் பெறுமா?

Published on 29/05/2019 | Edited on 29/05/2019

மக்களவை தேர்தலின் போது பாஜக கட்சி மீனவர்கள் நலன் காக்க மத்திய அமைச்சரவையில் மீன் வளத்துறைக்கென்று தனியாக அமைச்சகம் உருவாக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக கட்சி  மட்டும் சுமார் 303 தொகுதிகளை கைப்பற்றியது. நேற்று  டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சந்தித்து பேசினார். அதில் மத்திய அமைச்சரவையில் இடம் பெற போகும் கூட்டணி கட்சிகளின்  எம்பிக்கள் குறித்து பேசியதாகவும், யாரு யாருக்கு எந்தெந்த இலாக்காகள் ஒதுக்கீடு செய்யலாம் என்பது குறித்து பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து பாஜக கட்சியை அடுத்து யார் வழி நடத்துவது என்பது குறித்து பிரதமரிடம் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். இவர்களின் ஆலோசனையில் தமிழக மீனவர்கள் மற்றும் இந்திய மீனவர்கள் நலன் காக்கும் வகையில் மத்திய அமைச்சரவையில் மீன் வளத்துறை இடம் பெறுமா? என்பது நாளை தெரிந்துவிடும்.

 

 

nda alliance

 

அப்படியே மீன்வளத்துறையை பிரதமர் உருவாக்கினாலும் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு அந்த இலாக்கா வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் இந்திய அளவில் மீனவர்கள் அதிகம் பாதிக்கப்படும் மாநிலம் தமிழகம். இந்திய மீனவர்கள் தெரியாமல் கடல் எல்லையை தாண்டி சென்று மீன் பிடிப்பதால் தமிழக மீனவர்கள் அவப்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். இதனால்  தான் தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் மீனவர்கள் நலன் காக்க மீன்வளத்துறையை  உருவாக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் பாஜக கூட்டணியில் அதிமுக கட்சி இடம் பெற்றுள்ளதால் பாஜக தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் நாளைய புதிய மத்திய அமைச்சரவையில் மீன்வளத்துறை இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதாக டெல்லி அரசியல் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்