சர்வதேச மகளிர் தினம், ஆண்டு முழுவதும் மார்ச் எட்டாம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்மையைப் போற்றும் விதமாக மட்டுமில்லாமல், பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண்களின் சாதனையைக் கொண்டாடும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தையொட்டி பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "சர்வதேச மகளிர் தினத்தன்று நமது மனவுறுதிமிக்க பெண் சக்திக்கு வணக்கம் செலுத்துகிறேன். நம் தேசத்தைச் சேர்ந்த பெண்களின் பல சாதனைகளில் இந்தியா பெருமை கொள்கிறது. பரந்த அளவிலான துறைகளில், பெண்கள் மேலும் அதிகாரம் பெறுவதற்கு உழைக்கும் வாய்ப்பை பெறுவது நமது அரசாங்கத்திற்கு கிடைத்த கௌரவம்" எனத் தெரிவித்துள்ளார்.
மகளிர் தின வாழ்த்துகள் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "பெண்கள் நயத்துடன் கூடிய வலிமையான வரலாற்றையும் எதிர்காலத்தையும் உருவாக்க வல்லவர்கள்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் "உங்களைத் தடுக்க யாரையும் அனுமதிக்காதீர்கள்" எனவும் பெண்களுக்கு அவர் கூறியுள்ளார்.