Skip to main content

'ஆண்டுக்கு ஆண்டு வளர்கின்ற வாழையடி வாழை கட்சி திமுக'- அமைச்சர் துரைமுருகன் பேச்சு

Published on 13/05/2025 | Edited on 13/05/2025
'DMK is a banana party that is growing year by year' - Minister Duraimurugan's speech

திமுக வாழையடி வாழை கட்சி என அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.

வேலூரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ''பொதுவாக எனக்கு பின்னால் யார் பேசினாலும் நன்றாக பேசினால் நான் அவர்களை தட்டிக் கொடுப்பது வழக்கம். காரணம் திமுக ஆண்டுக்கு ஆண்டு வளர்கின்ற கட்சி. தென்னை மரத்தில் ஒரு மட்டை விழுந்தால் அடுத்த மட்டை அங்கே நிற்கும். அப்படித்தான் திமுகவிலே ஒரு தலை சாய்ந்தால் அடுத்த தலை நிற்கும். மு.க.ஸ்டாலின் என்ற ஒரு தலை வருவதற்கு காரணம் என்ன? கலைஞர் என்ற தலை சாய்ந்தது மு.க.ஸ்டாலின் வந்தார். அண்ணாவின் தலை சாய்ந்தது கலைஞர் வந்தார். எனவே வாழையடி வாழையாக வருகின்ற ஒரு கட்சி திமுக. அந்த கழகத்தில் நானும் உங்களோடு பல்லாண்டு காலம் இருக்கிறேன்.

இந்த தொகுதியில் ஆற்றிய காரியங்கள் எல்லாம் எனக்கே மறந்து போய்விட்டது. காரணம் குடியாத்தத்திற்கு பஸ் ஏறி போய் உட்கார்ந்து தாசில்தார் இருக்கிறாரா? என கேட்டால் அவர் மதியம் தான் வருவார் என்று சொல்வார்கள். மதியம் வரை காத்திருந்தால் நாலரை மணிக்கு தான் வருவார் என்பார்கள். நாலரை மணி வரை காத்திருந்தும் இன்று தாசில்தார் வரமாட்டார் என தெரிந்தவுடன் இன்னொரு முறை போயிட்டு வர முடியாது என்பதால் வராண்டாவிலேயே படுத்திருந்து  கையெழுத்து வாங்கி வந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இப்போது குடியாத்தத்திற்கு போக தேவையில்லை. தாசில்தார் என்றால் குடியாத்தம் ரோட்டிற்கு போனால் போதும் என்று மாற்றி அமைத்தவன் நான்தான். காரணம் அன்றைக்கு இந்த கஷ்டம் இருந்தது.

நான் 1971-ல் தேர்தலில் நின்ற பொழுது என்னை கொஞ்சம் நஞ்சம் ஆட்டம் காட்ட வில்லை. எல்லோரும் கேட்டார்கள் காட்பாடி எல்லாம் உப்பு தண்ணீர். இந்த தண்ணீரை மாற்றிக் கொடுக்க முடியுமா எனக் கேட்டார்கள். நான் சொன்னேன் ஒரே வருடத்தில் நான் இந்த தண்ணீரை மாற்றி தருவேன் என்று சொன்னேன். அதற்கு சின்ன பையன் மாதிரி இருக்கிறானே இவன் சொல்வதெல்லாம் எப்படி நடக்கும் என்றார்கள். நான் வெற்றி பெற்ற பிறகு கலைஞரையே கூட்டி வந்து வாட்டர் போர்டு என்ற ஒன்றை உருவாக்கி, அதற்கு பணம் ஒதுக்கி அவரே பணத்தை கொடுத்து திறந்து வைத்து நீங்கள் பாலாற்று தண்ணீரை குடித்தீர்கள். அதுவும் கெட்டுப் போய்விட்டது என்றவுடன் இன்றைக்கு காவிரியில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து கொடுக்கிறோம். காவிரியை பார்த்தவர்கள் கிடையாது நீங்கள். ஆனால் அங்கிருந்து தண்ணீரை கொண்டு வந்து இருக்கிறேன். ஆகவே எல்லாத்துறையிலும் இப்படித்தான். ஒரு காலத்தில் சொன்னார்கள் நம்ம ஊரில் வெறும் போலீஸ் ஸ்டேஷன் மட்டும் தான் இருக்கும். இன்ஸ்பெக்டர் கூட இருக்க மாட்டார்கள். காட்பாடி வேலூர் போக வேண்டும். ஆனால் இன்று நம்மூரில் ஒரு ஸ்டேஷனுக்கு 4 ஸ்டேஷன்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார்கள் இருக்கிறார்கள்'' என்றார்.

சார்ந்த செய்திகள்