Skip to main content

இந்தியாவின் பெயரை மாற்றக்கோரிய மனு... விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம்...

Published on 30/05/2020 | Edited on 30/05/2020

 

plea on changing indias camera

 

இந்தியா என்ற பெயரை இந்துஸ்தான் அல்லது பாரத் என மாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் ஜூன் 2-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.


டெல்லியை சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் தேசத்துக்கான இந்தியா எனும் பெயர் ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்டது. ஆங்கிலேயர் வைத்த இந்த பெயரை பாரத் அல்லது இந்துஸ்தான் என மாற்றும்போது சுதந்திரத்துக்காகப் போராடிய முன்னோர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, அவர்களின் போராட்டத்தை நினைவுபடுத்தும் விதமாக அமையும். கடந்த 1948-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டப் பிரிவு வரைவு 1 குறித்த விவாதம் நடந்தபோது பெரும்பாலானோர் இந்துஸ்தான், அல்லது பாரத் எனப் பெயரை வைக்கவே வலுவான ஆதரவு இருந்துள்ளது. எனவே பாரம்பரியத்தைக் காக்க நகரங்களின் பெயரை மாற்றுவது போல இந்தியா என்ற பெயரை பாரத் அல்லது இந்துஸ்தான் என மற்றம் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த மனுவை ஜூன் 3 விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்