Skip to main content

ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டுமே பணி! 

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

Only four years in the army!

 

ராணுவ செலவுகளைக் குறைக்கும் வகையில் முப்படைகளிலும் நான்கு ஆண்டுகள் மட்டுமே பணி வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு இன்று அறிமுகம் செய்கிறது. 

 

மத்திய அரசின் பட்ஜெட்டில் இந்திய ராணுவத்திற்குதான் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிலையில், 'அக்னி பாத்' என்ற புதிய ராணுவ ஆள் எடுப்புத் திட்டத்தை முப்படைகளின் தளபதிகள் இன்று வெளியிடுகின்றன. அதன்படி, முப்படைகளிலும் நான்கு ஆண்டுகள் மட்டுமே பணி வழங்கப்படும். 

 

நான்கு ஆண்டுகள் முடிவில் 80% வீரர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர். அதேநேரத்தில், திறமை மற்றும் காலியிடங்களைப் பொறுத்து 20% பேர் பணியைத் தொடர அனுமதிக்கப்படுவர். மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்திற்கான செலவு பல்லாயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்படும் எனத் தெரிகிறது. எட்டு நாடுகளில் இதுபோன்று செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து, பாதுகாப்புத்துறை அமைச்சகம் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.  

 

சார்ந்த செய்திகள்