பீகார் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் நிதிஷ்குமார் மீது வெங்காயம் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றன. கடந்த வாரம் முதற்கட்ட தேர்தல் முடிவுற்ற நிலையில், இன்று இரண்டாவதுகட்ட தேர்தல் நடைபெறுகிறது. பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 94 தொகுதிகளில் இன்று காலை தொடங்கியது.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் நிதிஷ்குமார் மீது வெங்காயம் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் மதுபானியின் ஹர்லாகியில் நிதிஷ்குமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, கூட்டத்திலிருந்த ஒருசிலர் நிதிஷ்குமாரை நோக்கி வெங்காயங்களை வீசினர். அப்போது அங்கிருந்த காவலர்கள் நிதிஷ்குமாரை சுற்றிப் பாதுகாத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.