காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் சுமார் 40 சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை வீரர்கள் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக விமானங்களை எடுத்து சென்று பாகிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் பாலக்கோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 170-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர் என இந்திய விமானப்படை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இத்தாலி பத்திரிகையாளரும் தீவிரவாதிகள் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளார். ஆனால் இதனை பாகிஸ்தான் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த விமானப்படை தாக்குதலில் இந்திய விமானம் அத்துமீறி நுழைந்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவம் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது. அதில் அபிநந்தன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரை உடனடியாக பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.
இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும் இந்திய அரசின் ராஜதந்திர நடவடிக்கையால் அபிநந்தன் 60 மணி நேரத்தில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான் ராணுவம். பின்னர் இந்திய ராணுவ மருத்துவமனையில் அபிநந்தனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின் ஓய்வில் இருந்த அபிநந்தன் தற்போது ராஜஸ்தான் சூரத்கார் விமானப்படை தளத்தில் பணிப்புரிய ஆணையை வழங்கியது இந்திய விமானப்படை. ஏற்கெனவே காஷ்மீரில் பணியாற்றிய அபிநந்தன் அவருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் ராஜஸ்தானில் பணியாற்ற ஆணையை வழங்கியுள்ளது. விங் அபிநந்தனின் தந்தை இதே விமானப்படைத்தளத்தில் பணிபுரிந்ததும், விங் அபிநந்தன் அங்கு தனது படிப்பை தொடர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் மே -11 ஆம் தேதி பணியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.