Skip to main content

நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து தனது மகள்களை மீட்டு தர கோரி குஜராத் நீதிமன்றத்தில் தந்தை மனு...

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஜனார்த்தன ஷர்மா என்பவரும் அவருடைய மனைவியும் இணைந்து நித்யானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைத்திருக்கும் இரு மகள்களையும் மீது தருமாறு மனு ஒன்றை அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

ma nithya nandhitha

 

 

பெங்களூரூவை சேர்ந்தவர் ஜனார்த்தன ஷர்மா, 7  முதல் 15 வயது வரையிலான தனது மூன்று மகள்களையும் கடந்த 2013ஆம் ஆண்டு பெங்களூரில் நித்யானந்தா நடத்தும் கல்வி நிறுவனத்தில் சேர்த்துள்ளார். 

இதன்பின்னர், பெங்களுருவில் இருந்து அஹமதாபாத்திலுள்ள நித்தியானந்தாவின் நிர்வாகத்திற்கு அவர்கள் மாற்றப்பட்ட செய்தியறிந்த ஷர்மா, அங்கு மகள்களை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது ஆசிரமத்தில் உள்ளவர்கள், அவரை உள்ளே அனுமதிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் காவல்துறையின் உதவியுடன் ஒரு மகளை அழைத்து வந்துவிட்டார். ஆனால் அவர்களது மூத்த மகள்களான லோபமுத்ரா ஜனார்த்தனா சர்மா (21) மற்றும் நந்திதா (18) ஆகியோர் வர மறுத்துவிட்டனர். இதையடுத்து ஷர்மா, தனது மகள்களை மீட்டுத் தருமாறு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். தங்களது இரண்டு மகள்களை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்துவதுடன், அவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு ஜனார்த்தன ஷர்மா தம்பதியினர் கோரியுள்ளனர். முன்னதாக, காவல்துறையும், குஜராத் மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

இந்நிலையில், நித்யா நந்திதா என்ற பெண், சில நாட்களுக்கு முன்பு பகிரப்பட்ட வீடியோவில் தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே ஆசிரமத்தில் வசிப்பதாகவும் அதே போல அவரது அக்கா லோபாமுத்ராவும் தன்னுடைய தனிப்பட்ட விருப்பதிலேயே இருப்பதாக  கூறியுள்ளார்.

 

Rajapaksha


 

 

 

சார்ந்த செய்திகள்