Skip to main content

நிர்பயா நிதியில் ஒரு ரூபாயைக்கூட பயன்படுத்தாத மாநிலங்கள்!

Published on 16/12/2019 | Edited on 16/12/2019
n

 

ஐந்து மாநிலங்கள் இதுவரை நிர்பயா நிதியில் இருந்து ஒரு ரூபாயைக் கூட பயன்படுத்தவில்லை என்று மத்திய அமைச்சரே தெரிவித்த தகவலால் அதிரவைத்துள்ளது.

 

கடந்த 2012ம் ஆண்டில் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.  நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இக்கொடூர சம்பவத்திற்கு பின்னர்,  பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான செலவுகளுக்காக 'நிர்பயா நிதி' என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு ஏற்படுத்தியது.  இத்திட்டத்திற்காக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு  ரூ.1,649 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.

 

இந்நிலையில், நிர்பயா நிதிக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் இதுவரை  கர்நாடகா 7 சதவிகிதமும்,  தமிழ்நாடு 3 சதவிகிதமும், டெல்லி 5 சதவிகிதமும் என்று ரூ.147 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக மத்திய மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.  அவர் மேலும்,  மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுரா ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான டாமன் டியூ ஆகியவை நிர்பயா நிதியில் இருந்து ஒரு ரூபாயைக் கூட பயன்படுத்தவில்லை என்றும்  தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்