பிரபல செய்தித் தொடர்பு நிறுவனமான டைம்ஸ் நௌவ் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தேசிய அளவில் ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 252 இடங்களை பிடிக்கும் என்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 147 இடங்களைப் பிடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழக அளவில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி 35 இடங்களையும் அ.தி.மு.க 4 இடங்களையும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்னாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் நிலையும் கவனிக்கப்படவேண்டியவை.
அந்த வகையில் 20 நாடாளுமன்ற தொகுதிகளையுடைய கேரள மாநிலத்தில் ஆண்டுவரும் இடதுசாரிகள் ஜனநாயக முன்னனி 3 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் எனவும் ஐக்கிய ஜனநாயக முன்னனியே 16 இடங்களை பிடிக்கும் எனவும் மற்ற கட்சிகள் 1 இடத்தைப் பிடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அது போல 25 தொகுதிகளையுடைய ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் 23 இடங்களையும் தெலுங்கு தேசம் கட்சி 2 இடங்களையும் பிடிக்கலாம் என்பது கருத்துக்கணிப்பு முடிவு.
28 தொகுதிகளையுடைய கர்நாடகாவில் பாஜக 17 இடங்களையும் காங்கிரஸ் 11 இடங்களையும் பிடிக்கலாம் என கணிக்கப்படுகிறது. தெலுங்கானாவில் மோத்தமுள்ள 17 இடங்களில் தெலுங்கானா ராஸ்ட்ர சமிதி (TRS) 10 இடங்களையும் காங்கிரஸ் 5 இடங்களையும் பாஜக 1 இடத்தையும் மீதமுள்ள 1 இடத்தை மற்ற கட்சிகளும் பிடிக்க வாய்ப்பிருக்கிறது. புதுச்சேரியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு முடிவு சொல்கிறது.