Published on 30/09/2021 | Edited on 30/09/2021

உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி, அக்டோபர் முதல் வாரத்தில் உத்தரகண்ட் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரகண்ட் செல்லும் பிரதமர் மோடி, ஆக்சிஜன் அலையை தொடங்கி வைக்கவுள்ளதாகவும், விமான நிலையம் மற்றும் ரிஷிகேஷ் எய்ம்ஸ் ஆகியவை சம்மந்தப்பட்ட உட்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் உத்தரகண்ட் மாநிலத்தில், பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் விதமாக பிரதமர் மோடி ரிஷிகேஷில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றவுள்ளதாகவும், இந்த உத்தரகண்ட் பயணத்தின்போது பிரதமர் மோடி கேதார்நாத்திற்குச் செல்லவுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.