Published on 14/03/2019 | Edited on 14/03/2019
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கம் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ படையினர் கொல்லப்பட்டனர்.
அதற்காக இந்தியா நடத்திய பதில் தாக்குதலில் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தானை கைது செய்யப்பட்டு, 2 நாட்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்தியா வந்தடைந்த அபிநந்தனுக்கு முதல்கட்ட சிகிச்சைகள் மற்றும் விசாரணைகள் நடைபெற்றன. இந்நிலையில் விமானப்படை வீரர் அபிநந்தனிடம் துறைரீதியான மற்றும் அமைப்பு ரீதியிலான விசாரணை நிறைவு பெற்றது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவர்களின் அறிவுரைப்படி அபிநந்தனுக்கு சில வாரங்கள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.