Skip to main content

இது என்னுடைய கடைசித் தேர்தல் - கட்சியினரை கலங்கவைத்த நிதிஷ்குமார்!

Published on 05/11/2020 | Edited on 05/11/2020

 

kl;

 

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 94 தொகுதிகளில் நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்கள். 17 மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலில், 1,463 வேட்பாளர்கள் களத்தில் இருந்தார்கள்.

 

பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். இரண்டாம் கட்டத் தேர்தலில், சுமார் 2.86 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தும், 53 சதவீத வாக்குகளே பதிவாகியது. இரண்டாம் கட்டத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 43 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 46 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 56 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 24 இடங்களிலும் போட்டியிட்டன. இந்நிலையில், மூன்றாம் கட்ட தேர்தல் வரும் 7 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பான பிரச்சாரத்தில் கலந்துகொண்ட அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார், இந்தத் தேர்தலே தனக்குக் கடைசி தேர்தல் எனவும், இதற்கு மேல், தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது அக்கட்சியினரை வருத்தமடையச் செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
 

 

 

சார்ந்த செய்திகள்