கர்நாடகா மாநிலத்தில், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதைக் கண்டித்து, ஒரு தரப்பு மாணவர்கள் காவி துண்டுகளை அணிந்து கல்லூரிக்கு வரத்தொடங்கினர். இதன் காரணமாக மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர சில கல்லூரிகள் தடை விதித்தன. இதனைத் தொடர்ந்து ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் போராட்டம் வெடித்தது.
இதனால் மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், மாணவர்கள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடைகளை பள்ளி, கல்லூரிகளில் பயன்படுத்த தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணை தொடந்து நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் உடுப்பியில் உள்ள அரசு முன் பல்கலைக்கழகத்திற்கு, நேற்று பல்வேறு சமூகங்களை சேர்ந்த மாணவிகள் ஒன்றாக கைகோர்த்து சென்ற புகைப்படத்தை டெக்கான் ஹெரால்டு ஊடகம் வேற்றுமையில் ஒற்றுமை என்கிற தலைப்பில் வெளியிட்டுள்ளது.
United we stand.
— Rahul Gandhi (@RahulGandhi) February 17, 2022
My India. pic.twitter.com/xUih16LVo7
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், அந்த புகைப்படத்தை பகிர்ந்து, ”ஒன்றுபட்டு நிற்கிறோம்” என கூறியுள்ளதோடு, இதுதான் எனது இந்தியா எனப் பெருமிதமும் தெரிவித்துள்ளார்.