ரயில் நிலையத்தில் வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு உதவி செய்வதற்காக ரயில்வே நடைபாதையில் ஆட்டோ ஒட்டியதாக கூறி ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
மும்பை விரார் ரயில் நிலையத்தில், ஏழு மாத கர்ப்பிணி பெண் ஒருவர் திடீரென வலியால் துடித்துள்ளார். அப்போது அவருக்கு உதவி செய்யும் பொருட்டு அங்கிருந்த ஒரு ஆட்டோகாரர், தனது ஆட்டோவை நடைபாதையில் ஓட்டிச்சென்று, அந்த பெண்ணை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அந்த பெண்ணுக்கு குறை மாதத்தில் குழந்தை பிறந்த நிலையில், விதிகளை மீறி ஆட்டோவை இயக்கியதாக கூறி அந்த ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். ஆட்டோ ஓட்டுனரின் நோக்கம் நல்லது என்றாலும், ஆட்டோ ஓட்டுநரின் செயல் விதிகளுக்கு புறம்பானது என கூறி கைது செய்யப்பட்டார். பின்னர், இனி விதிமுறைகளை மீற கூடாது என அறிவுரை வழங்கிய காவல்துறையினர், அந்த ஆட்டோ ஓட்டுநரை விடுவித்தனர்.