உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (10/03/2022) காலை 08.00 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 92 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
எந்தெந்த மாநிலத்தில் யார் ஆட்சி? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
பா.ஜ.க. கூட்டணி ஆளும் மாநிலங்கள்!
1. கர்நாடகா,
2. குஜராத்,
3. மத்தியப் பிரதேசம்,
4. உத்தரப் பிரதேசம்,
5. பீகார்,
6. ஹரியானா,
7. உத்தரகாண்ட்,
8. இமாச்சலப் பிரதேசம்,
9. சிக்கிம்,
10. அசாம்,
11. திரிபுரா,
12. மணிப்பூர்,
13. மிசோரம்,
14. நாகலாந்து,
15. அருணாச்சலப் பிரதேசம்,
16. மேகாலயா,
17. கோவா,
18. புதுச்சேரி.
காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள்!
1. ராஜஸ்தான்,
2. சத்தீஸ்கர்,
ஆம் ஆத்மி கட்சி ஆளும் மாநிலங்கள்!
1. டெல்லி,
2. பஞ்சாப்.
கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அதேபோல், ஆந்திப் பிரதேசம் மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும், தெலங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும் ஆட்சி செய்து வருகிறது. ஒடிஷா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் கட்சியும், மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும், ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியும் ஆட்சி செய்து வருகின்றன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சியும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.