Published on 24/04/2019 | Edited on 24/04/2019
பிரதமர் மோடியை பாலிவுட் நடிகர் அக்சய்குமார் இன்று காலை ஏ.என்.ஐ நிறுவனத்திற்காக சிறப்பு பேட்டி ஒன்றை எடுத்தார். மக்களவை தேர்தல் நடைபெறுவதால் அரசியல் இல்லாமலா மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அப்போது மோடியிடம் சமூகவலைத்தளங்களில் உங்களை பற்றி வரும் மீம்களை பார்ப்பதுண்டா என அக்ஷய் குமார் கேட்டார். அதற்கு பதிலளித்த மோடி, "என்னைப்பற்றி வரும் மீம்ஸ்களை பார்த்து சந்தோஷப்படுவேன். குறிப்பாக அதில் இருக்கும் கற்பனைத் திறன் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். சமூக ஊடகங்கள் பொது மக்களின் மனநிலையைப் பற்றி எனக்கு நல்ல கண்ணோட்டத்தை தருகிறது என்றும் மோடி பதிலளித்துள்ளார்.