Published on 15/05/2019 | Edited on 15/05/2019
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில் கடைசி கட்ட தேர்தல் வாரும் மே 19 ஆம் தேதி நடைபெறுகிறது.

ஹரியானா மாநிலத்தின் ரோதங்க் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஜஜ்ஜார் பகுதியில் உள்ள ஒருவர் தனது சகோதரன் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்ததால் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் நடந்துள்ளது. வாக்களிப்பது குறித்து இருவரும் பேசிக்கொண்டிருந்த போது காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்ததாக இளைய சகோதரர் கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த பாஜக தொண்டரான அவரது சகோதரர் துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். இதனால் சுய நினைவை இழந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அதற்குள்ளாகவே அவர் இறந்துள்ளார். வேறு கட்சிக்கு வாக்களித்ததால் சகோதரனையே ஒருவர் சுட்டு கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.