இந்தியா முழுவதும் கரோனா தொற்று ஒருபுறம் அதிகரித்த வண்ணம் இருந்தாலும் விரைவில் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் வர இருக்கின்றன. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் விரைவில் தேர்தல் வர இருக்கின்றது. இதற்கான பரப்புரையை பாஜக முதலில் ஆரம்பித்துள்ளது. இதற்கான சோஷியல் மீடியா பிரசாரத்தையும் பாஜக ஆரம்பித்துள்ளது.
இந்த பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமித்ஷா, மம்தா பானர்ஜியை கடுமையாக தாக்கி பேசினார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, “பங்களாதேஷில் இருந்து பல்வேறு மக்கள் மேற்கு வங்கம் வந்துள்ளார்கள். குறிப்பாக மதுவா இன மக்கள் அதிகம் பேர் மேற்கு வங்கத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும்படி மம்தா பானர்ஜி கேட்கிறார். பிரதமரின் ஆயுஷ்மான் திட்டத்தை செயல்படுத்த மம்தா தடையை ஏற்படுத்துகிறார். தேர்தல் வந்தால் மம்தா அரசியல் அனாதை ஆக்கப்படுவார்" என்றும் அவர் தெரிவித்தார்.