மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி மும்பையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே, உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
அதன்பிறகு 162 எம்.எல்.ஏக்களும், சரத்பவார், உத்தவ் தாக்கரே, சோனியா காந்தி தலைமையின் கீழ் கட்சிக்கு நேர்மையாக இருப்பேன் எனவும், பாஜகவுக்கு பயனளிக்கும் எதையும் செய்ய மாட்டேன் எனவும் என்று உறுதிமொழி ஏற்றனர்.
அப்போது எம்.எல்.ஏக்கள் மத்தியில் பேசிய சரத்பவார், "பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைக்க இது கோவா அல்ல. இது மகாராஷ்டிரா. மஹாராஷ்டிராவில் பெரும்பான்மை இல்லாமல் ஒரு அரசு உருவாக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கோவா, மணிப்பூர் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. ஆனால் ஆட்சி அமைத்தார்கள். பெரும்பான்மை நிரூபிப்பதில் எங்களுக்கு எந்த எந்த பிரச்சனையும் இருக்காது. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 162 எம்.எல்.ஏக்களுக்கும் அதிகமாக அழைத்து வருவோம். கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது" என்றார்.
#WATCH pic.twitter.com/CV8VhOmKl1
— ANI (@ANI) November 25, 2019