Published on 16/09/2022 | Edited on 16/09/2022
இந்தியாவிற்கு சீட்டா ரக சிறுத்தைகளைக் கொண்டு வருவதற்காக நமீபியாவிற்கு சிறுத்தை முகம் வரையப்பட்ட விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நல்லெண்ண தூதர்களை புலிகளின் பூமிக்கு அழைத்துச் செல்ல சிறப்புப் பறவை விமானம் மண்ணில் தரையிறங்கி உள்ளது என்று அந்த விமானத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் படத்தை நமீபியாவில் உள்ள இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள வனவிலங்கு பூங்காவிற்கு சிறுத்தைகள் நாளை வரவுள்ளன. தனது பிறந்தநாளில் இந்தியா வரும் சிறுத்தைகளை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கவுள்ளார்.