வருகிற 30ம் தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்த உலக கோப்பையில்தான் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளன. அதனால் இந்த உலக கோப்பை மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.இந்த உலக கோப்பையை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளில் ஒன்றுதான் வெல்லும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமரசகர்கள் கூறிவருகின்றனர். தற்போதுள்ள இந்திய அணி மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் கொண்ட டீமாக இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம் என்கின்றனர். இந்திய அணியில் பேட்டிங் மற்றும் பௌலிங் ஆர்டர் மிக சிறப்பாக உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இளம் வீரர்கள், சீனியர் வீரர்கள் என சமபலமாக இந்திய அணி இருப்பதால் இந்த உலகக்கோப்பையில் வலுவான அணிகளுள் ஒன்றாக இந்திய அணி உள்ளது. தோனி தலைமையிலான 2011ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணி போலவே தற்போதும் இந்திய அணி வீரர்கள் நல்ல பாமில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தற்போதைய இந்திய அணி உடலளவிலும் மனதளவிலும் மிகவும் வலிமையான அணியாகவே உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய அணியின் புள்ளிவிவரங்களை எல்லாம் பார்க்க நான் விரும்பவில்லை. ஆனால் வெளிநாடுகளில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் தோனி தலைமையிலான அணிக்கு நிகரானது தற்போதைய அணி. சொல்லப்போனால் அதைவிட சிறந்த அணி என்று பாடி அப்டன் இந்து ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.