கேரளாவைச் சேர்ந்த பட்டய கணக்காளரான அன்னா செபாஸ்ட்டியன்(26) புனேவில் உள்ள பன்னாட்டு ஆலோசனை நிறுவனமான எர்ன்ஸ்ட் ஆண்ட யான்(EY)நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 4 மாதங்களாக பணியாற்றி வந்த அன்னா செபாஸ்டியன் பணிசுமை காரணமாக உடல்நலகுறைவு ஏற்பட்டு உயிரிழந்தாக கூறப்படுகிறது.
இது குறித்து அன்னா செபாஸ்டியனின் தாயார் அனிதா எர்ன்ஸ்ட் ஆண்ட யான் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் ராஜீவ் மேமானி உருக்கமாகக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “வேலைக்குச் சேர்ந்த 4 மாதங்களில், ஓய்வின்றி உழைத்தாள். அவளுக்கு வழங்கப்பட்ட பணிகளைச் செய்து முடித்தாள். இருப்பினும் நீண்ட நேரம் பணியாற்றியது அவளுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பைக் கொடுத்தது. மார்ச் மாதம் பணியில் சேர்ந்தவள், ஜூலை மாதம் உயிரிழந்தாள்.
குறிப்பாக வார இறுதி நாட்களிலும் வேலை, ஓவர் டைம் பணி, ஹிப்ட் நேரம் முடிந்து வீட்டிற்கு வந்தபிறகும் பணியாற்றுவது உள்ளிட்ட பணிச்சுமைக்கு ஆளாகி கடைசியாக அவளே எங்களை விட்டுச் சென்றுவிட்டால். அவளது இறுதிச் சடங்குக்கு அவள் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து யாரும் வரவில்லை. எனது மகளைப் போல இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் யாரும் உயிரிழக்கக் கூடாது என்பதற்காகத் தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த கடிதம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.