நடந்து முடிந்த 17 ஆவது மக்களவை தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து 30-ம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கிறாா்.
இந்த நிலையில் கேரளாவில் எப்படியாவது கணக்கை தொடங்கி விட வேண்டுமென்ற அமித்ஷா திட்டத்தின் படி அங்கு தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட சிலரை பாஜக தோ்தலில் களம் இறக்கியது. இதில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு கேரளா மாநில பாஜக முன்னாள் தலைவரான கும்மனம் ராஜசேகரன் மிசோரம் மாநில கவா்னராக இருந்து வந்தாா்.
இவா் திருவனந்தபுரம் தொகுதி மக்களிடத்தில் நல்ல செல்வாக்கு மிக்கவராக கருதப்பட்டவா். இதனால் இவரை அங்கு களம் இறங்கினால் வெற்றி பெற்றுவிடாலம் என்று கருதிய பாஜக தலைமை கும்மனம் ராஜசேகரை மிசோரம் கவா்னா் பதவியை ராஜினமா செய்ய வைத்து திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளா் சசிதரூா் மற்றும் கம்யூனிஸ்ட் வேட்பாளா் திவாகரனுக்கு எதிராக களம் இறக்கியது.
மோடி மற்றும் அமித்ஷா வுடன் நெருக்கமாக இருக்கும் கும்மனம் ராஜசேகரன் வெற்றி பெற்றால் மத்திய மந்திாி தான் என்று உறுதியாகவும் கூறப்பட்டது. மேலும் தோ்தல் கருத்து கணிப்பும் கும்மனம் ராஜசேகரன் வெற்றி பெறுவாா் என்று தான் கூறியது.
இந்த நிலையில் தோ்தல் முடிவு வேறு விதமாக மாறி கும்மனம் ராஜசேகரன் 3,13,925 வாக்குகள் பெற்று காங்கிரஸ் சசிதரூாிடம் 1,00,132 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாா். இதனால் அதிா்ச்சியடைந்த பாஜகவினா் கும்மனம் ராஜசேகரன் தோல்வியடைந்தாலும் அவா் மத்திய மந்திாி ஆவது உறுதி இல்லையென்றால் மீண்டும் அவா் கவா்னராவாா் என்று பாஜகவினா் கூறியுள்ளனா். இதற்கிடையில் தற்போது கலைக்கப்பட்ட 16 ஆவது மக்களவையில் கேரளாவை சோ்ந்த அல்போன்ஸ் கன்னன்தானம் மத்திய இணை மந்திாியாக இருந்து வந்தாா். இதனால் அவா் மீண்டும் மந்திாியாக் கப்படுவாரா? என்ற கேள்வியும் உள்ளது.
|